மாணவர்களின் மனநிலை

படிக்கனும், ஆனா புரியமாட்டங்குது… கிளாஸ்ல முக்கால் மணி நேரத்துல டீச்சர் சொல்றது பாதிதான் புரியுது. மீதிய கேட்கறதுக்கு கூச்சமா இருக்கு, அப்படியே கேட்டாலும்… இத இத படிச்சு மனப்பாடம் பண்ணிக்க, பாஸ் பண்ணிடலாம்னு சொல்லிடறாங்க.

வீட்டுல சொல்லித்தர யாருமில்லை. அப்படியே சொல்லிக் கொடுத்தாலும் பாதி நேரம் ‘இத ஏன் நீ ஸ்கூல்ல டீச்சர்கிட்ட கேட்கலன்னு அம்மா அப்பா திட்டுறாங்க’ அதுக்கு, இவங்க கிட்ட கேட்காமலெ இருக்கலாம்னு தோணுது.

சரி, டியூஷன் போகலாம்னு யாருடா நல்லா சொல்லித்தர்ராங்கன்னு பாத்தா…எங்காவது ஒண்ணு ரெண்டு டீச்சர்தான் கிடைக்கிறாங்க. அவங்ககிட்ட ஏற்கனவே கிளாஸ் மாதிரி கூட்டம். பேட்ச் பேட்சா நடத்துறாங்க. எத்தனை சப்ஜெக்டுக்கு எத்தனை டீச்சர்கிட்ட போறது? இங்கயும் பிரச்சனை.

பேசமா எல்லாத்தையும் மக்கப் பண்ணிட வேண்டியதுதான். வேற என்ன பண்றது.
ஒரு வழியா மக்கப் பண்ணி பரிட்சை எழுதி பாஸ் பண்ணியாச்சு… இப்ப என்னாடன்ன நீட் ஜீ அப்படீன்னு எண்டிரன்ஸ் எக்சாம். டாக்ராகு இல்லா என்ஜீனியர் ஆகுன்னு வீட்டுல ஒரே பேச்சு, இதுல வேற சயின்ஸ் ஆர்ட்ஸ் படிக்கலாம்னுனாலும் அதுக்கும் எண்டிரன்ஸ் எக்சாம் வைக்க போறாங்கலாம். கிழிஞ்சுச்சு டவுசர்.

எண்டிரன்ஸ் எக்சாம் எழுதனும்னா எத நான் மக்கப் பண்றது? மக்கப் பண்ண வேணாம் அதுக்குனு சில (cheat) டெக்னிக் முறை இருக்கு அதுல படிச்சா கண்ண மூடிக்கிட்டு.. கொடுக்கிற நாலு எம்சிகியு சாய்ஸ்ல ஒன்ன தொட்ட அதுதான் ஆன்சர்னு எழுதிடலமா? ஒரு மண்ணும் புரியமாட்டங்குது போங்க?

இப்படித்தான் படிப்பு என்றாலே ஏதோ ஒரு பெரும் போருக்கு செல்வதுபோல் பிள்ளைகள் நிலை மாறிவிட்டது. சமூக அழுத்தங்கள், பெற்றவர்களின் எதிர்பார்ப்பு, சக மாணவர்களின் போட்டிகளால் உருவாகும் அழுத்தங்கள் என்று எப்படியாவது வெற்றி பெற வேண்டுமென்ற நோக்குடன் பண்ணிரெண்டு வருட போர்க்கால வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் நமது பிள்ளைகள். எல்லாவற்றிர்க்கும் என்ன காரணம்? பாடத்தை புரிந்துக் கொள்ளாததுதான்.

புரிந்து படித்தால் எதுவும் உடனுக்குடன் மனதிற்குள் பதியும். அதை புரியும்படி சொல்லித்தருவதுதான் ஈசி மார்கஸ் எனும் கற்றல் முறை (Easy Marks Learning Method). மாணவர்களின் வேறுபட்ட படிப்பாற்றல் மற்றும் உள்வாங்கும் திறனை முன்னிருத்தி உருவாக்கப்பட்ட கற்றல் முறை.

ஈசி மார்க்ஸ் மூலம் படிக்கும் மாணவர்கள் ஆறு முதல் பண்ணிரெண்டாம் வகுப்பு வரை உள்ள பாடங்களை தெளிவாக புரிந்துக் கொண்டு படிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் நுழைவுத் தேர்வுக்கு தேவையான பயிற்சியையும் பெற முடிவதால் பண்ணிரெண்டாம் வகுப்பிற்குப்பின் அவர்களால் எந்த நுழைவுத் தேர்விலும் சுலபமாக வெற்றி பெற முடியும்.

ஈசி மார்க்ஸின் அடிப்படை நோக்கம், கல்வி எளிதாக்கப்பட வேண்டும், எளிதாக இருந்தால் புரிதல் சுலபமாக இருக்கும். புரிதல் நன்றாக இருந்தால் பயிற்சி உற்சாகமாக இருக்கும். பயிற்சியில் உற்சாசம் நிறைந்திருந்தால் வெற்றி எளிதாக இருக்கும். எனவே மாணவர்களின் எதிர்கால வெற்றியை உறுதி செய்யும் நோக்குடன் வடிவமைக்கப்பட்ட புதிய கற்றல் முறைதான் ஈசி மார்க்ஸ்.

அதுமட்டுமல்ல, இந்த எளிய முறை எல்லா மாணவர்களையும் சென்றடைய வேண்டுமென்பதால், இதன் கட்டணமும் மிகமிகக் குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. படிப்பு என்பது எப்போது எளிதாகிறதோ அப்போதே அந்த மாணவரும், குடும்பமும் ஏன் அவர்கள் சார்ந்த சமுதாயமும் முன்னேற்றத்தின் பாதையில் பயணிக்கத் தொடங்கிவிடும்.

ஈசி மார்க்ஸ்…மாணவர்களின் உற்ற நண்பன். எதிர்கால வெற்றிக்கு தோள் கொடுக்கும் ஓர் உயிர்த் தோழன்.

#easymarks #studies #school #education #parents #students #exams

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *